யாழில் மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தின் மாநாடு!

3207250b alcohol 850x460 acf cropped

மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தின் ஏற்பாட்டில். மதுசாரம், புகையிலை மற்றும் ஏனைய போதைப்பொருள் தடுப்பு தொடர்பில் யாழ் மாவட்டத்தின் பங்களிப்பு தொடர்பான மாநாடு இன்றையதினம் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன்  தலைமையில் இடம்பெற்ற குறித்த மாநாட்டில் உள நல மருத்துவ நிபுணர் வைத்தியர் எஸ்.சிவதாஸ், மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தின் வடக்கு மாகாண ஒருங்கிணைப்பாளர் கோடீஸ்வரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.