உழுந்து மற்றும் பயறு செய்கைகளுக்கான விதைப்பொதிகள் வழங்கிய வியாழேந்திரன்!

VIyalenthiran
VIyalenthiran

உழுந்து மற்றும் பயறு செய்கைகளுக்கான விதைப்பொதிகள் வழங்கும் நிகழ்வு முல்லைத்தீவு மாவட்டத்தின்  துணுக்காய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரன் அவர்களின் அமைச்சின் கீழ் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உழுந்து மற்றும் பயறு செய்கைகளுக்கான விதைப்பொதிகள் வழங்கும் நிகழ்வு முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச செயலகத்தில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன், அமைச்சின் செயலாளர், பிரதேச செயலாளர் பிரதேச சபை உறுப்பினர்ககள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு விதை பொதிகளை வழங்கிவைத்துள்ளார்கள்.

குறித்த அமைச்சினூடாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 1371 பயனாளிகளுக்கு உழுந்து மற்றும் பயறு விதை பொதிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .