இலங்கை அரசை களங்கப்படுத்தும் நோக்கம் எமக்கில்லை – சுவிஸ் அரசு

swiss
swiss

இலங்கை அரசினை களங்கப்படுத்தும் எவ்வித தேவைப்பாடுகள் தமது அரசுக்கு கிடையாது என சுவிசர்லாந்து அரசு நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான சுவிசர்லாந்து தூதரகம் மற்றும் வெளிவிவகார அமைச்சு ஆகியன கடந்த 30 ஆம் திகதி இராஜதந்திர அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தது.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்:

“இலங்கை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட சுவிஸ் தூதரக உள்ளூர் பணியாளர் ஒருவர் தொடர்பான தவறான புரிதல்களால் இருநாட்டு உறவுகளில் கடந்த சில வாரங்களாக விரிசல் காணப்பட்டது.

குறித்த விவகாரம் தொடர்பாக பொது மேடைகளில் வெளியிடப்பட்டு வந்த உறுதிப்படுத்தப்படாத தகவல்களால் இரு நாடுகளுக்கும் இடையில் பேணப்பட்டு வந்த நல்லுறவில் தேவையற்ற அழுத்தத்தை ஏற்படுத்தியிருந்தது.

இவ்வேளையில் இலங்கை அரசினை களங்கப்படுத்தும் எவ்வித தேவைப்பாடுகள் சுவிசர்லாந்து அரசுக்கு கிடையாது” என குறிப்பிடப்பட்டுள்ளது.