முல்லைத்தீவு கடற்கரையில் தடையுடைத்து மாவீரர்களுக்கு அஞ்சலி

received 623148568721194
received 623148568721194

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றிலேயே தங்கள் இன்னுயிர்களை தியாகம் செய்து கொண்ட  மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துகின்ற மாவீரர் நாள் இன்றாகும்

received 427523955569502

இன்றைய நாளில் முல்லைத்தீவு மாவட்டத்திலே மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு  பாரிய தடைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தாலும் தடைகளை உடைத்து பல்வேறு இடங்களிலும்  மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளது

முல்லைத்தீவு  கடற்கரையிலே சுடர் ஏற்றுவதற்காக தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரும் வாலிபர் முன்னணி  பொருளாளருமான பீற்றர்  இளஞ்செழியன்  அவர்களும் அவரது மனைவி மற்றும் பலரும் சுடர் ஏற்றுவதாக சென்ற போது முல்லைத்தீவு கடற்கரையில் வைத்து பீற்றர்  இளஞ்செழியனை   காவற்துறையினர் கைது செய்துள்ளனர்

IMG 0428 1

இந்நிலையில்  நிலையில் குறித்த இடத்தில் காவற்துறையினருக்கும் மக்களுக்கும் இடையில் முரண்பாடு தோற்றுவிக்கப்பட்டது

ஏற்கனவே முல்லைத்தீவு கடற்கரையில் இராணுவம் காவற்துறையினர் குவிக்கப்பட்டிருந்த நிலையில் சிறிது நேரத்திலேயே அந்த இடத்திலேயே இராணுவத்தினர் மோட்டார் சைக்கிள்களில் வந்து மக்களை அச்சுறுத்தும் விதமாக செய்யப்பட்டபோதும் பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும் குறித்த இடத்திலிருந்து சுடர்களை ஏற்றி சுடர்களை தாங்கியவாறு முல்லைத்தீவு கடற்கரைக்கு சென்ற பொதுமக்கள் முல்லைத்தீவு கடற்கரையில் சரியாக ஆறு மணிக்கு பொதுச் சுடர் ஏற்றி அதனை தொடர்ந்து அகவணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தியுள்ளனர்

IMG 0393

முல்லைத்தீவு கடற்கரையில் பொதுச்சுடரினை பீற்றர் இளஞ்செழியன் கிந்துஜா ஏற்றிவைத்தார் அதனை தொடர்ந்து அகவணக்கம் செலுத்தி பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்

முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பல்வேறு பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு மத்தியிலும் இன்று சிறப்புற மாவீரர்நாள் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது