மாடு மேய்க்கச் சென்ற குடும்பஸ்தர் பரிதாப மரணம்!

1602124041 dead body student 2
1602124041 dead body student 2

அணைக்கட்டில் விழுந்து குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

இந்தச் சம்பவம் பொலனறுவை, ஹிங்குருக்கொட காவல்துறை பிரிவில் இடம்பெற்றுள்ளது என காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மாடுகளை அழைத்துக்கொண்டு அகேரிஸ் அமுன பிரதேசத்துக்கு நேற்றுக் காலை சென்ற அவர், மாலையாகியும் வீடு திரும்பியிருக்கவில்லை.

இந்நிலையில், உறவினர்கள் இன்று காலை அவரைத் தேடிச் சென்றபோதே அவர் அணைக்கட்டில் விழுந்து உயிரிழந்திருந்தமை தெரியவந்துள்ளது.

ஹிங்குரக்தமன பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயது நபரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

இது தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.