நாட்டின் பல பகுதிகளில் இன்று இரவு வேளையில் மழை!

201909220304514180 In Tamil Nadu today with rain showers likely SECVPF
201909220304514180 In Tamil Nadu today with rain showers likely SECVPF

நாட்டின் பல பகுதியில் இன்று (28) இரவு வேளையில் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமேல் மற்றும் தென் மாகாணங்களின் சில பகுதிகளில் இவ்வாறு 100 மில்லிமீற்றர் அளவில் மழைவீழ்ச்சி பதிவாகும் என அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழைபெய்யும் சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.