வவுனியாவிலும் எரிவாயு அடுப்பு வெடிப்பு

Gas Vavuniya 2
Gas Vavuniya 2

வவுனியா, வேரகம அரச ஊழியர்களுக்கான வீடமைப்புத் திட்டத்தில் உள்ள வீடொன்றில் நேற்று (01) எரிவாயு அடுப்பு வெடித்துள்ளதாக பிரதேசவாசி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சமையல் எரிவாயு அடுப்பு வெடித்த வீட்டில் இருந்த இல்லத்தரசி சமையல் எரிவாயு அடுப்பில் சமையல் செய்துவிட்டு சமையல் எரிவாயு அடுப்பினை நிறுத்தி வைத்ததன் பின்னர் திடீரென தீப்பிடித்து சமையல் எரிவாயு அடுப்பு ஒளிவிட்டு வெடித்ததாகவும் கூறினார். சமையல் எரிவாயு அடுப்பு தீ பற்றி எரியும் போது அயலவரை அழைத்ததாகவும் மேலும் சேதம் ஏற்படாமல் இருக்க சமையல் எரிவாயு சிலிண்டரிலிருந்து ரெகுலேட்டரை அகற்றியதாகவும் இல்லத்தரசி கூறினார்.
சம்பவம் தொடர்பில் வவுனியா இரட்டைபெரியகுளம் காவற்துறையினருக்கு தகவல் வழங்கியதையடுத்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் காவற்துறையினர் தெரிவித்தனர்.