தனியார் பேருந்துகளின் இயந்திரங்கள் செயலிழக்க மண்ணெண்ணெய் பாவனையே காரணம்

uthaya kampanpila
uthaya kampanpila

நாட்டில் எரிபொருள் தொடர்பில் பகிரப்படும் பல்வேறு கருத்துகளுக்கு பதிலளிக்கும் வகையில் கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில், கலந்துகொண்ட எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில கருத்து தெரிவித்தார்.

அந்நிய செலாவணி பற்றாக்குறைக்கு நாடு முகங்கொடுத்துள்ளமையால், தரம் குறைந்த டீசல் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படுவதாகவும், அந்த தரம்குறைந்த டீசலைப் பயன்படுத்துவதானால், பேருந்துகளின் இயந்திரங்கள் செயலிழப்பதாகவும் பேருந்து உரிமையாளர் சங்கம் ஒன்றின் தலைவர் தெரிவித்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

தனியார் பேருந்துகளுக்குப் பயன்படுத்தப்படும் டீசல்தான், அரச பேருந்துகள், தொடருந்துகள், சிற்றூர்ந்துகள், மின்பிறப்பாக்கிகள், மின்நிலையங்கள் என்பனவற்றிலும் பயன்படுத்தப்படுகின்றன.

அவ்வாறெனில் ஏன் தனியார் பேருந்துகளின் இயந்திரங்கள் மாத்திரம் இடையே செயலிழக்கின்றன?

அதாவது, பேருந்து சங்கங்களின் புள்ளிவிபரங்களின்படி, தற்போது தனியார் பேருந்து துறையில் 25 சதவீதமான பேருந்துகள் டீசலுக்கு பதிலாக மண்ணெண்ணெயைப் பயன்படுத்துகின்றன.

மண்ணெண்ணெய் ஒரு லீற்றர் 77 ருபாவாகும்.

டீசல் லீற்றர் ஒன்றின் விலை 111 ரூபாவாகும்.

இந்த விலை இடைவெளி காரணமாக, இன்று பெருமளவான பேருந்துகள் டீசலுக்கு பதிலாக மண்ணெண்ணையைப் பயன்படுத்துவதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.