சஹ்ரானின் இரகசிய முகாமில் பயிற்சி பெற்ற மற்றொரு இளைஞன் கைது!

63c8c885 906507f3 10eb5f2f zaharan 850x460 acf cropped 850x460 acf cropped
63c8c885 906507f3 10eb5f2f zaharan 850x460 acf cropped 850x460 acf cropped

உயிர்த்த ஞாயிறு தின் தற்கொலை குண்டுத் தாக்குதல்களின் பிரதான குண்டுதாரியான சஹ்ரான் ஹஷீம், தாக்குதலுக்கு முன்னர் அம்பாந்தோட்டை சிப்பிக்குளம் பகுதியில் நடாத்திய பயிற்சி முகாமில் பங்கேற்றதாக கூறப்படும் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் கண்டி மாவட்ட கிளை அலுவலக அதிகாரிகள் ஊடாக 25 வயதான குறித்த இளைஞன் கண்டி – ஹிங்குல பகுதியில் வைத்து நேற்று (2) மாலை செய்யப்பட்டதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சர் நிஹால் தல்துவ கூறினார்.

பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் விசாரணைகளில் வெளிப்படுத்திக்கொள்ளப்பட்ட தகவல்கள் மற்றும்  கிடைக்கப்பெற்ற தகவல்களை மையப்படுத்தி இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள இளைஞன் அம்பாந்தோட்டை சிப்பிக்குளம் இரகசிய முகாமில், சஹ்ரானின் அடிப்படைவாத நடவடிக்கைகள் தொடர்பில் பயிற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் சந்தேக நபர்களுடன் அவருக்கு நெருங்கிய தொடர்புகள் இருந்துள்ளமையும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இந் நிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் உதவி ஒத்தாசைகளை முன்னெடுத்தமை, தகவல்களை மறைத்தமை தொடர்பில் சந்தேக நபருக்கு எதிராக சி.ரி.ஐ.டி.யின் சிறப்புக்குழுவினர், பயங்கரவாத தடை சட்டத்தின் 9 (1) ஆம் அத்தியாயத்தின் கீழ் 90 நாள் தடுப்புக் காவல் உத்தரவைப் பெற்று மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.