நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின் விநியோக தடை தொடர்பில் சிஐடி விசாரணை!

CID
CID

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின் விநியோக தடை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், நுரைச்சோலை மின் மையத்தின் பணிகள் வழமைக்குத் திரும்ப குறைந்தது 2 நாட்கள் எடுக்கும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அதுவரைக்கும் நாட்டில் இடைக்கிடையில் மின்விநியோகத் தடை ஏற்படக்கூடும் எனவும் அந்த சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.