தமிழ் தேசிய மக்கள் முன்னணி சபையிலிருந்து வெளிநடப்பு!

TNPF
TNPF

பாதுகாப்பு அமைச்சின் ஒதுக்கீட்டின் மீது வாக்கெடுப்பை நடத்த அனுமதிக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இலங்கை தமிழரசுக் கட்சியும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் சபையிலிருந்து வெளிநடப்பு செய்தன.

பாதுகாப்பு அமைச்சின் ஒதுக்கம் மீதான விவாதம் இன்று சபையில் இடம்பெற்றது.

இந்த நிலையில், இன்று மாலை பாதுகாப்பு அமைச்சின் ஒதுக்கீட்டின் மீது வாக்கெடுப்பை நடத்த அனுமதிக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இலங்கை தமிழரசுக் கட்சியும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தன.

எவ்வாறிருப்பினும், அதன் பின்னர் இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை பிரேரணைக்காக, இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் சபையில் பிரசன்னமாகினர்.