வெற்றிகரமாக நிறைவேறியது வேலணை பிரதேச சபையின் பாதீடு!

download 10
download 10

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆளுகைக்குட்பட்ட யாழ்ப்பாணம் வேலணை பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தவிசாளரின் மேலதிக வாக்கினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வேலணை பிரதேச சபையின் அடுத்த ஆண்டுக்கான பாதீடு இன்றையதினம் சபையின் தவிசாளர் நமசிவாயம் கருணாககுருமூர்த்தி தலைமையில நடைபெற்றது.

இதன்போது புதிய ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் முன்மொழிவை தவிசாளர் சபையில் முன்வைத்திருந்தார்.
குறித்த பாதீடு தொடர்பில் சபையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவரதும் கருத்துக்கள் பதிவிடப்பட்டன. இந்நிலையில் எதிர் தரப்பினர் வழமைபோன்று தமது எதிர் கருத்துக்களை முன்வைத்திருந்த நிலையில் பாதீடு வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.
20 உறுப்பினர்களைக் கொண்ட வேலணை பிரதேச சபையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 6 ஆசனங்களையும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன 2, ஆசனங்களையும், தமிழரசுக் கட்சி 8 ஆசனங்களையும், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கியதேசியக் கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியன தலா ஓர் ஆசனங்களையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தலைமையிலான ஆளும் தரப்பு சார்பாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் 6 உறுப்பினர்கள், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் இரண்டு உறுப்பினர்கள், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியவற்றின் தலா ஓர் உறுப்பினர்கள் உள்ளிட்ட 10 பேர் ஆதரவாக வாக்களித்திருந்தனர்.
அத்துடன் தமிழரசுக் கட்சியின் 8 உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தலா ஓர் உறுப்பிரககள் என 10 உறுப்பிரக்ள் எதிராக வாக்களித்திருந்தனர். சம பங்கு ஆழும் தரப்பு மற்றும் எதிர்த்தரப்பு உறுப்பினர்களிற்கிடையில் கிடைக்கப்பெற்றமையால் அதன் நிறைவேற்றத்திற்காக தவிசாளரது சிறப்பு வாக்கு வழங்கப்பட்டு பாதீடு நிறைவேற்றப்பட்டமை சிறப்பம்சமாகும்.