பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்டவரின் சடலம் நாளை இலங்கைக்கு!

1638698222 1638696568 priyanatha L
1638698222 1638696568 priyanatha L

பாகிஸ்தானில் சியால்கோட் பகுதியில் கலகக் கும்பலால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட தியவடனகே தொன் நந்தசிறி பிரியந்த குமாரவின் சடலம் நாளை (06) ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை ஊடாக அரச செலவில் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக வெளிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.

சடலம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து அவரது அடுத்த நிலை உறவினர்களால் ஏற்றுக்கொள்ளப்படும். வெளிநாட்டு அமைச்சு இந்த விடயத்தை ஒருங்கிணைத்து வருகின்றது.

தியவடனகே தொன் நந்தசிறி பிரியந்த குமாரவின் மரணம் தொடர்பிலான விசாரணை அறிக்கை ஒன்றை வழங்குமாறு இஸ்லாமாபாத்தில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சிடம் கோரியுள்ளது.

இழப்பீடுகளை வழங்குவது தொடர்பில் பாகிஸ்தான் அதிகாரிகள் மற்றும் இறந்தவரின் தொழில் தருனருடன் வெளிநாட்டு அமைச்சின் ஒருங்கிணைப்புடன் இஸ்லாமாபாத்தில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருகின்றது.