பாதீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் பங்கேற்பது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி கலந்துரையாடல்!

laxman 1
laxman 1

நாளைய தினம் நாடாளுமன்றில் இடம்பெறும் பாதீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் பங்கேற்பது தொடர்பில் தீர்மானிப்பதற்கான விசேட கலந்துரையாடல் ஒன்றினை ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுத்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்காரவை இலக்கு வைத்து இடம்பெற்ற சம்பவம் தொடர்பிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக எதிர்கட்சியின் பிரதான அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

சபாநாயகரால் நாடாளுமன்றத்தை முறையாக நிர்வகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதை காணமுடிகிறது.

இதனால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

இதனை தாம் வன்மையாக கண்டிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.