5 வருடங்களில் 100,000 கிலோமீற்றர் வீதி வேலைத்திட்டம்!

johnston fernando
johnston fernando

100,000 கிலோமீற்றர் வீதி வலையமைப்பு வேலைத்திட்டம் எமது ஐந்து வருடங்கள் முடிவதற்குள் நிறைவு செய்யப்படும் என தான் உறுதியளிப்பதாக நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற நெடுஞ்சாலைகள் அமைச்சின் நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்தார்.

எமது அமைச்சு தொடர்பில் கருத்து தெரிவித்த எதிர்க்கட்சி மற்றும் அரசாங்கத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் முதலில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கட்சி அரசியல் இல்லாமல் இந்த நாட்டில் நெடுஞ்சாலை கட்டமைப்பை உருவாக்க முடிவு செய்துள்ளோம். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு இந்த சந்தர்ப்பத்தில் நன்றி கூற விரும்புகின்றேன் என தெரிவித்தார்.