வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் சுற்றுலாத்துறையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் -சஜித்

sajith 6
sajith 6

நாட்டின் பொருளாதாரத்தில் சுற்றுலாத்துறை கொண்டுள்ள முக்கியத்துவத்தைக் கருத்திற் கொண்டு இந்த துறைக்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் கொரோனா தொற்று பரவல் காரணமாக சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், வரவு செலவுத் திட்டத்தின் சில முன்மொழிவுகள் சுற்றுலாத்துறையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கமைய சில பரிந்துரைகளை முன்வைப்பதாகவும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.