அடுத்த 24 மணி நேரத்துக்குள் எரிவாயு விநியோகம் மீண்டும் ஆரம்பம்!

gas 1
gas 1

லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் எரிவாயு நிறுவனங்கள் அடுத்த 24 மணி நேரத்துக்குள் உள்நாட்டு எரிவாயு விநியோகத்தை மீண்டும் தொடங்க முடிவு செய்துள்ளன. நுகர்வோர் விவகார அதிகார சபையால் வழங்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு இணங்க மீண்டும் விநியோகிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சர் லசந்த அழகிய வண்ணவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது இரு நிறுவனங்களும் இந்த உடன்படிக்கைக்கு வந்துள்ளன.