கடலில் இழுத்துச் செல்லப்பட்ட 3 பேரில் ஒருவர் சடலமாக மீட்பு

1638752472 mullaitevu 2
1638752472 mullaitevu 2

முல்லைத்தீவு கடலில் நீராடிக் கொண்டிருந்த மூவர் கடலில் மூழ்கி ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், இவரை தேடும் பணி தொடர்வதாக முல்லைத்தீவு காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் இருந்து முல்லைத்தீவு சென்ற நான்கு பேர் முல்லைத்தீவு கடலில் நீராடிய போது அலை இழத்து சென்ற நிலையில் மூவர் காணாமல் போயினர்.

அவர்களை கடலில் தேடியும் காணாமையால் முல்லைத்தீவு காவற்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, பொலிஸார், கடற்படையினர், பொதுமக்கள் இணைந்து தேடும் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், இருவரை தேடும் நடவடிக்கை தொடர்கிறது.

அவர்களுடன் கூடச் சென்ற பெண் முல்லைத்தீவு காவற்துறையினரால் அழைத்து செல்லப்பட்டு அவரிடம் காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் மற்றும் காணாமல் போன இருவரும் வவுனியாவைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.