நாட்டின் சில பகுதிகளில் இன்று(12) இரவு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் 50 மில்லிமீற்றர் அளவில் மழைபெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதேநேரம் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் இரவு வேளையில் 75 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழைபெய்யும் சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.