யுகதனவி அடிப்படை மனுக்கள் மீதான விசாரணை நாளைவரை ஒத்திவைப்பு!

0a1c1610 6d1e73b1 yuhadanavi 850x460 acf cropped
0a1c1610 6d1e73b1 yuhadanavi 850x460 acf cropped

ஐவர் அடங்கிய பூரண நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் இன்று(16) ஆராயப்பட்ட யுகதனவி மின்நிலைய ஒப்பந்தத்துக்கு எதிரான அடிப்படை உரிமைகள் மனுக்கள் மீதான விசாரணை நாளைவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனேக அலுவிஹார, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் எல்.டி.பி. தெஹிதெனிய ஆகிய ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.