யாழில் கல்விசாரா ஊழியர்கள் சுழற்சிமுறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம்!

IMG 6f791b0c0a90f516f5b6986acaaad5fb V
IMG 6f791b0c0a90f516f5b6986acaaad5fb V

யாழ் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் ஆட்சேர்ப்பில் பாதிக்கப்பட்டோர் புதன்கிழமை முதல் சுழற்சிமுறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த போராட்ட களத்திற்கு இன்று முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்தவர்களுடன் கலந்துரையாடினார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அண்மையில் கல்விசாரா ஊழியர்களின் வெவ்வேறு பதவிநிலை வெற்றிடங்களை நிரப்பும் பொருட்டு உயர்கல்வி அமைச்சிலிருந்து வந்த பெயர்ப் பட்டியலில் வேலை வாய்ப்பிற்காக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் சிபாரிசுடன் உயர்கல்வி அமைச்சில் பெயர்களை பதிவு செய்தனர்.

இந்நிலையில் தங்களது பெயர்கள் வராது பாதிக்கப்பட்டோர் தங்களது கோரிக்கைகளை உயர் கல்வி அமைச்சோ,பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவோ, யாழ் பல்கலைக்கழக நிர்வாகமோ, ஏற்று உரிய தீர்வகளை வழங்க முன்வராததோடு தங்களது நியாமான கோரிக்கைகள் தொடர்பில் மக்கள் பிரதிநிதிகளோ, அரசியல்வாதிகளோ அக்கறை காட்டவும் இல்லை என்பதால், பிரச்சினையை வெளிக்கொணருமுகமாக பல்கலை முன்றலில் சுழற்சி முறையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.