விருந்துக்கு சென்ற இளைஞன் கிணற்றில் சடலமாக மீட்பு!

thumb queen 12
thumb queen 12

இளவாலை சந்தியில் உள்ள காணிக் கிணறு ஒன்றிலிருந்து இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கிளரின் கொல்வின் (வயது- 32) என்ற இளைஞரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் சிலருடன் இணைந்து விருந்தில் கலந்துகொண்டிருந்த குறித்த இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது.

கொலையா தற்கொலையா என இளவாலைப் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.