இலங்கைக்கு வருகை தந்துள்ள டோகோ நாட்டு ஜனாதிபதி

doho president with sirisena
doho president with sirisena

இலங்கைக்கு 2 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள டோகோ ஜனாதிபதியின் இலங்கை விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார, வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளுக்கு பெரும் ஊக்கமளிப்பதாக ஜனாதிபதி சிறிசேன தெரிவித்தார்.

இலங்கையின் முன்னணி வர்த்தகர்களுடன் இன்று நடைபெறவுள்ள கூட்டத்தில் டோகோவில் புதிய முதலீட்டு வாய்ப்புகளுக்காக இலங்கை வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்களை அழைப்பதாக ஜனாதிபதி பௌயர் னஸிங்பே தெரிவித்தார். குறிப்பாக ஆடைத் தொழிலில் வணிகர்களுக்கு கூடுதல் வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் பயங்கரவாத செயற்பாடுகளை ஒழிப்பது குறித்த இலங்கை அரசாங்கத்தின் துரித நடவடிக்கைகள் தொடர்பில் டோகோ ஜனாதிபதி பாராட்டுத் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

டோகோவில் நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ள சர்வதேச பயங்கரவாதம் தொடர்பிலான சம்மேளனத்தில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் தொடர்பில் தௌிவுபடுத்தவுள்ளதாக டோகோ ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

டோகோ ஜனாதிபதியின் இலங்கை வருகை குறித்து ஜனாதிபதி சிறிசேனா தனது திருப்தியை வெளிப்படுத்தியதோடு, ஆப்பிரிக்க நாடுகளுடனான பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது இலங்கையின் முதன்மை முன்னுரிமை என குறிப்பிட்டுள்ளார்.

டோகோ ஜனாதிபதியின் வருகை இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பையும் நட்பையும் மேலும் வலுப்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்த ஜனாதிபதி டோகோ ஜனாதிபதி பௌயர் னஸிங்பேயிற்கு சிறப்பு நினைவு பரிசு வழங்கினார்.