யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் தங்குமிடம் ஒன்றில் மோதல்: ஒருவர் காயம்

Jaffna University mini 720x480 720x480 1
Jaffna University mini 720x480 720x480 1

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் தங்குமிடம் ஒன்றில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக கோப்பாய் காவல்துறை தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, கோப்பாய் காவல்துறை பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு மாணவர்களின் தங்குமிடத்தில், ஏற்பட்ட தனிப்பட்ட முரண்பாடு காரணமாக இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது காயமடைந்த ஒருவர், யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.