கொரோனா தொற்று உறுதியான 688 பேர் அடையாளம்

202009280529000009 In Maratha New to 18 thousand people Corona kills 380 people SECVPF
202009280529000009 In Maratha New to 18 thousand people Corona kills 380 people SECVPF

கொரோனா தொற்று உறுதியான மேலும் 688 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 597,035 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 13,444 பேர் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை,கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 163 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 568,373 ஆக அதிகரித்துள்ளது.