எரிபொருள் கொள்வனவுக்கு இந்தியா உதவி

1592202660fuel price in sri lanka
1592202660fuel price in sri lanka

இலங்கை எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்காக இந்தியா புதிதாக மேலும் 500 மில்லியன் டொலர் கடன் எல்லை சலுகையை வழங்கியுள்ளது.

இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் ஊடக அறிக்கை ஒன்றில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

ஏற்கனவே நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கும், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது பேசப்பட்ட விடயங்களும் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

இதற்கு முன்னர் 900 மில்லியன் டொலர் நிதிப்பரிமாற்ற வசதியை வழங்கி இருந்தது.

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி மற்றும் இருதரப்பு பொருளாதார வர்த்தக தொடர்புகளின் பாரிய பங்களிப்பாக இந்த சலுகைகள் வழங்கப்பட்டிருப்பதாகவும் இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.