வவுனியா தோணிக்கல் பகுதியில் சமையல் எரிவாயு அடுப்பு வெடிப்பு: காவற்துறையினர் விசாரணை

IMG 20220122 WA0048
IMG 20220122 WA0048

வவுனியா, தோணிக்கல் பகுதியில் சமைத்துக் கொண்டிருந்த போது சமையல் எரிவாயு அடுப்பு ஒன்று வெடித்துள்ளதாக வவுனியா காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

IMG 20220122 WA0053

வவுனியா, தோணிக்கல், திருவள்ளுவர் வீதியில் உள்ள வீடு ஒன்றில் பெண் ஒருவர் சமைத்துக் கொண்டிருந்த போது நேற்றைய தினம் (22.12) திடீரென சமையல் எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது.

இதனையடுத்து வீட்டார் சமையல் எரிவாயு சிலிண்டரை பாதுகாப்பாக அகற்றி மேலதிக அனர்த்தம் ஏற்படுவதை தடுத்துள்ளனர். அத்துடன் குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா காவற்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவற்துறையினர் தடவியல் காவற்துறையினரின் உதவியுடன் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.