வவுனியா பேராறு நீர்த்தேக்கத்தில் நீரேந்து பிரதேச பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்டம்

DSC00456
DSC00456

வவுனியாவில் நீரேந்து பிரதேச பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்ட நிகழ்வு இன்றையதினம் வவுனியா பேராறு நீர்த்தேக்க பகுதியில் இடம்பெற்றது.

Screenshot 20220130 134504

ஜனாதிபதியின் நாட்டை கட்டியெழுப்பும் சுவீட்சத்தின் நோக்கு எனும் சிந்தனை ஊடாக 2025ம் ஆண்டு இறுதிக்குள் அனைவருக்கும் சுத்தமான குடிநீர் வழங்குவதை உறுதி செய்யும் நோக்கிலே தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் நிறைவேற்றப்படுகின்ற வடமாகாணத்தில் நீரேந்து பிரதேசங்களை பாதுகாப்பதற்கான விசேட நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாகவே குறித்த நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

DSC00491

இதன்போது வவுனியா பேராறு நீர்த்தேக்கத்தின் நீரேந்து பகுதியினை பாதுகாக்கும் நோக்கத்துடன், பேராறு நீர்த்தேக்கத்தின் நீரேந்து பகுதிகளில் 250 மரக்கன்றுகள் நடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

DSC00465

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான், வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், அமைச்சின் இணைப்புச்செயலாளர் சங்கரலிங்கம் மற்றும் உயர் அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.