உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகாிப்பு

img6
img6

கடந்த ஒரு மாதமாக உலக சந்தையில் தொடர்ந்து அதிகரித்து வரும் மசகு எண்ணெய் விலை தற்போது 94 அமெரிக்க டொலர்களை நெருங்கி வருகிறது.

ப்ரெண்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை நேற்று 94 டொலரை நெருங்கியிருந்தது. 

இதேவேளை, உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையானது கடந்த 2014 செப்டெம்பர் மாதம் முதல் அதாவது கடந்த 7 வருடங்களில் 100 டொலரை தாண்டியிருக்கவில்லை.

இந்நிலையில், தற்போது ஏற்பட்டுவரும் இந்த சடுதியான விலை அதிகரிப்பை பார்க்கையில், எதிர்வரும் சில மாதங்களில் மசகு எணணெய் விலை 100 டொலரை தாண்டிவிடும் என சந்தை ஆய்வாளர்கள் எதிர்வுகூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.