இவ்வாரத்தில் அரிசி விலைகளில் கனிசமானளவு அதிகரிப்பு!

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், இந்த வாரம் அரிசி விலை, குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அரிசி விநியோகம் வீழ்ச்சியடைந்துள்ளமையே இதற்குக் காரணமாகும் என ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் தெரிவித்துள்ளது.

இதன்படி, அனைத்து வகையான உள்ளூர் அரிசி வகைகளின் விலைகளும், 3 ரூபா முதல் 13 ரூபாவுக்கு இடைப்பட்ட அளவில் அதிகரித்துள்ளன.

அத்துடன், இறக்குமதி செய்யப்படும் அரிசி வகைகளின் விலைகள்,  9 ரூபா முதல் 18 ரூபாவுக்கு இடைப்பட்ட அளவில் அதிகரித்துள்ளன.

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்தமையால், இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.