உயரதிகாரியினால் தாக்கப்பட்ட பெண் ஊழியர்!

amparai
amparai

நிந்தவூர் கமநல கேந்திரமத்திய நிலையத்தில் பணியாற்றும் பெண் முகாமைத்துவ உதவியாளரை அவரது தலைமை உத்தியோகத்தர் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் நிந்தவூரில் கடந்த புதனன்று 1 ஆம் திகதியன்று நண்பகல் இடம்பெற்றுள்ளது

நாவிதன்வெளி சவளக்கடையைச் சேர்ந்த 34 வயதுடைய திருமதி தவப்பிரியா சுபராஜ் என்பவரே தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.

இது தொடர்பாக சம்மாந்துறைப் பொலிஸ் நிலையத்தில் அன்று மாலை 5 மணியளவில் பாதிக்கப்பட்ட பெண் உத்தியோகத்தரால் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் அவர் வலி தாங்கமுடியாத நிலையில் கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 1ம் திகதி சத்திய பிரமாணம் நிகழ்வு ஆரம்பமாகிய வேளை இச்சம்பவம் இடம்பெற்றதாகவும் அனைத்து ஊழியர்களுக்கு முன்னிலையில் தனக்கு கன்னத்தில் அறைந்ததாக தாக்குதலுக்குள்ளான பெண் தெரிவித்தார்.

குறித்த பெண் ஊழியர் தாக்கப்பட்டு 3 நாட்கள் ஆகியும் பொலிஸார் தாக்குதல் மேற்கொண்ட அதிகாரி மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளாமையினால் சந்தேகம் நிலவுவதாகவும் அதன் காரணமாக கல்முனை பிராந்திய இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் பாதிக்கப்பட்ட பெண் குறித்த அலுவலகத்தில் பணியை தொடர விரும்பவில்லை என குறிப்பிட்டுள்ளார்.