நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமை தொடர்பில் சுயாதீன நாடாளுமன்ற குழு கலந்துரையாடல்

thayasiri
thayasiri

நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமை தொடர்பில், சுயாதீன நாடாளுமன்ற குழு கொழும்பில் இன்று கூடி கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுத்திருந்தது.

எதிர்வரும் திங்கட்கிழமையுடன் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ பதவி விலகினால், அதன் பின்னர், நாட்டின் எதிர்கால அரசியல் நிலை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் சகல அரசியல் கட்சிகளுடனும் கலந்துரையாடவுள்ளோம்.

அத்துடன், எமது ஆதரவுடன் எதிர்கட்சியினால் கொண்டுவரப்படும் அவநம்பிக்கை பிரேரணையை வெற்றிக்கொள்வோம் என்ற நம்பிக்கையுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.