இன்று பல பாகங்களில் மழைக்கான சாத்தியம்!

Rainning
Rainning

மேல், சப்ரகமுவ, மத்திய, மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்றைய தினம் மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

சில பிரதேசங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும்.

அத்துடன், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காற்று சற்று அதிகரித்த வேகத்தில் வீசக்கூடும்.

காங்கேசன்துறை முதல் மன்னார், புத்தளம், கொழும்பு, மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடற்பகுதிகள் கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.