எதிர்க்கட்சியிலிருந்து புதிய அரசாங்கத்தின் சிறந்த செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு – த.தே.கூ

MA Sumanthiran 720x450 1
MA Sumanthiran 720x450 1

புதிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்து , பிரல செய்திச்சேவை ஒன்று வினவிய போதே அதன் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இதனைத் தெரிவித்தார்.

எனினும். எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு புதிய அரசாங்கத்தின் சிறந்த செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ஸ, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில ஆகியோர் பிரதிநிதித்துவம் செய்யும் 10 கட்சிகளின் கூட்டணி, புதிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொள்ளாதிருக்க தீர்மானித்துள்ளாக இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதித் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற கூட்டணியின் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது