நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பாதுகாப்புக்கு 6 காவல்துறை உத்தியோகத்தர்கள் நியமனம்

police 3
police 3

சகல நாடாளுமன்ற உறுப்பினர்களினதும் பாதுகாப்பை அதிகரிக்க காவல்துறைமா அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதன்படி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு இதுவரை பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட இரண்டு காவல்துறையினருக்கு மேலதிகமாக 4 காவல்துறை உத்தியோகத்தர்களை வழங்க அமைச்சர் பாதுகாப்பு பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.

பிரதேச காவல்துறை நிலையங்களில் உள்ள தாம் விரும்பிய காவல்துறை அதிகாரிகளை அமைச்சர் பாதுகாப்பு பிரிவில் இணைத்து கொண்டு பாதுகாப்பு பணிகளுக்கு அமர்த்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அலரிமாளிகை மற்றும் காலி முகத்திடல் போராட்டங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னர், ஏற்பட்ட வன்முறை சம்பவங்களின் போது நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மரணித்ததுடன் மேலும் பல அமைச்சர்களின் வீடுகளுக்கு தாக்குதல்களும் நடத்தப்பட்டன.

இதனையடுத்து, சகல நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பையும் அதிகரிக்க காவல்துறை மா நடவடிக்கை எடுத்துள்ளார்.