இளைஞர்களின் குரலை ஒன்றிணைக்க வேண்டும் – பிரதமர்

Ranil 800x466 1
Ranil 800x466 1

நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி, மக்களுக்கு நிவாரணம் வழங்கும் சவாலை வெற்றிகொள்வதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

செய்திச் சேவை ஒன்றுடன் இடம்பெற்ற செவ்வியில், அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் இலங்கை எதிர்நோக்கிய பொருளாதார சவால்களையும் தம்மால் வெற்றிகொள்ள முடிந்திருந்ததாக பிரதமர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டுதான் எமக்கு மிகவும் சிக்கலானதாகும்.

வெளிநாட்டு ஒதுக்கம் இல்லை.

மறுபுறத்தில் அரசாங்கத்துக்கு வருமானம் இல்லை.

வரி குறைக்கப்பட்டுள்ளது.

எனவே, வரி அறவீட்டை எவ்வாறு முன்னெடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் அலி சப்ரி கூறினார்.

இந்த வரிசைகளை இல்லாது செய்ய வேண்டும்.

மூன்று வேளையும் சாப்பிட மக்களுக்கு இடமளிக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்போது கேள்வி எழுப்பிய ஊடகவியலாளர், நாடாளுமன்றில் நீங்கள் மட்டுமே உள்ளீர்க்ள். இவற்றை செய்வதற்கு உங்களுக்கு நாடாளுமன்றில் பலம் உள்ளதா என வினவினார்.

இதற்கு பதிலளித்த பிரதமர், ஆம் என குறிப்பிட்டதுடன், சிலர் எதிர்க்கலாம், ஏனையவர்கள் இணங்கலாம் என்று தெரிவித்தார்.

அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

இளைஞர்களின் குரலை ஒன்றிணைக்க வேண்டும் என்பதே தமக்கு அவசியமாக உள்ளது என்றும், அவர்களுக்கு மாற்றமே அவசியமாகும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.