நான்கு புதிய அமைச்சர்கள் நியமனம்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் 4 புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

இதன்படி, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் வெளிவிவகார அமைச்சராகவும், தினேஷ் குணவர்தன பொது நிர்வாகம், உள்நாட்டு விவகாரங்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சராகவும், பிரசன்ன ரணதுங்க நகர்ப்புற அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சராகவும், எரிசக்தி அமைச்சராக கஞ்சன விஜேசேகரவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.