உண்டியல் முறையில் அமெரிக்க டொலர்களை மாற்ற முனைந்த இருவர் கைது

kaithu
kaithu

உண்டியல் முறையில் 47,000 அமெரிக்க டொலரை மாற்ற முனைந்த 2 பேரை காவல்துறை விசேட அதிரடிப்படையினர் பொரலஸ்கமையில் வைத்து கைது செய்துள்ளனர்.

40 மற்றும் 52 வயதுகளையுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.