ஊரடங்கு உத்தரவு அமுலாகும் நேரத்தில் மாற்றம்

thani
thani

நாடளாவிய ரீதியில் இன்று ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ள காலப்பகுதியில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இன்று இரவு 11 மணி முதல் நாளை அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளது.

முன்னதாக இன்று இரவு 8 மணி முதல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.