பிரதி சபாநாயகர் பதவிக்கு சபையில் இரு பெயர்கள் முன்மொழிவு – இரகசிய வாக்கெடுப்பும் ஆரம்பம்

a
a

பிரதி சபாநாயகர் பதவிக்கு இரண்டு பெயர்கள் நாடாளுமன்றில் முன்மொழியப்பட்டன.

பிரதி சபாநாயகர் பதவிக்கு ரோஹினி கவிரத்னவின் பெயரை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ முன்மொழிந்ததோடு, லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி அந்த யோசனையை ஆமோதித்தார்.

இதற்கிடையில், ஜி.எல்.பீரிஸ் எம்.பி அஜித் ராஜபக்ஷவின் பெயரை முன்மொழிந்ததுடன், பண்டார எம்.பி பிரேரணையை ஆமோதித்தார்.

எனினும், பிரதி சபாநாயகர் பதவிக்கான தேர்தலை எதிர்த்த விமல் வீரவங்ச, பணத்தை வீண்விரயம் செய்யாமல் இணக்கப்பாட்டுக்கு வருமாறு கேட்டுக் கொண்டார்.

தேர்தலை நடத்துவதற்கு சுமார் 9 மில்லியன் ரூபா செலவாகும் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

ஆனால், இதுவரை பிரதி சபாநாயகர் நியமிக்கப்படவில்லை.

இவற்றை தொடர்ந்து தற்சமயம் இரகசிய வாக்கெடுப்பும் ஆரம்பமாகியுள்ளது.