தமிழினப் படுகொலை நினைவேந்தல் வாரத்தின் ஆறாம் நாளில் புதுக்குடியிருப்பு மந்துவில் சந்தியில் அஞ்சலி

IMG 20220517 WA0014
IMG 20220517 WA0014

கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக கொன்று அழிக்கப்பட்டதன் நினைவாக தமிழினப் படுகொலை நினைவேந்தல் வாரம் வருடம்தோறும் மே மாதம் 12ஆம் திகதி முதல் 18ஆம் திகதிவரை அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது

குறித்த காலப்பகுதியில் தமிழ் இனப்படுகொலை நடைபெற்ற பல்வேறு பகுதிகளிலும் தமிழின படுகொலையின் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவேந்தல் வாரத்தில் உடைய ஆறாம் நாள் நிகழ்வுகள் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்றிருந்தது.

இந்த வகையில் புதுக்குடியிருப்பு மந்துவில் சந்தியில் படுகொலை செயப்பட்ட பொது மக்களுக்கு சமூக செயற்பாட்டாளரான பீற்றர் இளஞ்செழியன் பொதுச் சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தினார்.