பொத்துவிலில் இருந்து முள்ளிவாய்க்கால் நோக்கிய பயணம் வவுனியாவை வந்தடைந்தது

IMG 20220517 131322 1
IMG 20220517 131322 1

இன விடுதலையை வேண்டி பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையான மக்கள் பேரணி ஒன்று கடந்த 15ஆம் திகதி பொத்துவிலில் இருந்து ஆரம்பமாகி நேற்றைய தினம்  திருகோணமலையை வந்தடைந்தது.

IMG 20220517 133548 1

 அதனைந்தொடர்ந்து இன்றையதினம் (17) பிற்பகல் வவுனியாவை அடைந்த குறித்த பேரணி வவுனியா பழையபேருந்து நிலையத்திற்கு சென்றது.

IMG 20220517 131325 1

அங்கு வவுனியா மாவட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட  முள்ளிவாய்க்கால் கஞ்சி அனைவருக்கும் பகிரப்பட்டது. 

IMG 20220517 133915

அங்கிருந்து மாங்குளம் ஊடாக நாளையதினம் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் நோக்கி செல்லவுள்ளது
பேரணியில் மதகுருமார்கள், சமூக ஆர்வலர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

IMG 20220517 133814