முல்லைத்தீவில் தமிழக உலருணவுப் பொதிகளை வழங்க நடவடிக்கை!

1653624045 tamilnadu 2
1653624045 tamilnadu 2

முல்லைத்தீவு மாவட்டத்துக்கு இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உலருணவுப் பொதிகளை வழங்குவதறக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் 15,857 குடும்பங்களுக்கு அரிசியும், 3,964 குடும்பங்களுக்கு பால் மாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தெரிவித்துள்ளார்

இதில் மிகவும் வறுமையான குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு 15,857 குடும்பங்களுக்கு அரிசி வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

இன்னும் எங்களுக்கு அது வந்து சேரவில்லை. அதேபோல் பால்மாவை பொறுத்தவரையில் 3,964 குடும்பங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் கர்ப்பிணித் தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் உள்ள குடும்பங்களுக்கு மாத்திரம் வழங்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான தெரிவுகள் பிரதேச செயலாளர் பிரிவு ரீதியாக இடம்பெற்றுக் கொண்டு வருகின்றன. உண்மையில் 35,000க்கும் அதிகமான குடும்பங்கள் தகுதியானவர்களாக இருக்கின்றார்கள். ஆனால் எங்களுக்கு வழங்கப்பட்டது 15,857. ஆகவே இதற்குள் அவர்களை தெரிவு செய்து வழங்குமாறு பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியிருக்கிறோம். அந்த தெரிவு இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. எங்களுக்கு பொருட்கள் வந்து சேரும் பட்சத்தில் அதனை நாங்கள் அவர்களுக்கு உடனடியாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து கொண்டிருக்கின்றோம் எனவும் தெரிவித்தார்