இன்றும் சில பகுதிகளில் மழை பெய்யும்

Rainning
Rainning

நாட்டின் பல பாகங்களில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும், கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும், 75 மில்லிமீற்றர் அளவில் மழைவீழச்சி எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரம், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும், மணிக்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது