வவுனியாவில் குளத்தில் நீராடச்சென்ற நால்வரில் இருவர் சடலமாக மீட்பு:இருவரை காப்பாற்றிய வளர்ப்பு நாய்

IMG 20220602 WA0056
IMG 20220602 WA0056

வவுனியா ஈரப்பெரியகுளத்தில் நேற்று (02) பிற்பகல் குளிப்பதற்காக தேக்கவத்தை பகுதியைச் சேர்ந்த நால்வர் தமது வளர்ப்பு நாயையும் அழைத்துக்கொண்டு சென்றனர். 

IMG 20220602 WA0037

எனினும் குளத்தில் குளித்து கொண்டிருந்தபோது நால்வரில் இருவர் அங்கு நீரில் மூழ்கினர். இதை அவதானித்த மற்றைய இருவரும் அவர்களை காப்பாற்ற முற்பட்டபோது அவர்களும் மூழ்கினர் இதையடுத்து அவர்கள் அழைத்து சென்ற வளர்ப்பு நாய் இருவரையும் காப்பாற்றி குளத்தின் கரைக்கு அழைத்து சென்றதாக அங்கிருந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

IMG 20220602 WA0044


நீரில் மூழ்கிய இருவரையும் குளத்தில் தேடுதல் மேற்கொண்ட மக்கள், காவற்துறையினர் சுமார் 30 நிமிடங்களுக்கு பின்னர்  நதீச விதுசர (வயது 15) என்பவருடைய சடலம் மீட்கப்பட்டு வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது எனினும் நீண்ட நேரமாகியும் கைலாஸ் என்ற 16 வயது சிறுவனை தொடர்ந்தும் தேடிய போது சுமார் ஒரு மணித்தியாலயம் 30 நிமிடங்களுக்கு பின்னர் சடலமாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

IMG 20220602 WA0042

மேலதிக விசாரணைகளை ஈரப்பெரியகுளம் காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.