வவுனியா சிறைச்சாலையில் இருந்து 6 பேர் விடுதலை

DSC07568
DSC07568

பொசன் தினத்தினை முன்னிட்டு பொது மன்னிப்பின் அடிப்படையில் இன்று 6 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா விளக்கமறியில் சிறைச்சாலையில் சிறு குற்றங்களுடன் தடுத்து வைக்கப்பட்ட 6 சிறைக்கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்ட நபரொருவருக்கு பிறிதொரு வழக்கும் இருந்தமையினால் அவர் மீண்டும் விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இதன்போது வவுனியா விளக்கமறியில் சிறைச்சாலையின் அத்தியட்சகர் நல்லையா பிரபாகரன், பிரதி அத்தியட்சகர் சந்திரசிறி உட்பட்ட உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.