யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் உள்ள மருத்துவரொருவரின் வீடு உடைக்கப்பட்டு நகைகள் திருடப்பட்டுள்ளன.
நேற்றுமுன்தினம் இடம்பெற்ற இச்சம்பவத்தில் 8 பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தெல்லிப்ளை மருத்துவமனையில் சேவையாற்றும் மருத்துவரொருவரின் வீட்டிலேயே இந்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கோப்பாய் காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவ தினத்தன்று வீட்டில் எவரும் இருக்கவில்லை என்றும், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் கோப்பாய் காவல்துறையினர் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.