ஒரு பிடி சோறூட்ட வேண்டும் என்று 26 வருடங்களாக போராடி வந்த அரசியல் கைதியின் அன்னை மரணம்

IMG 20220616 WA0014
IMG 20220616 WA0014

தமிழ் அரசியல் கைதி ஒருவரின் தாயார் நேற்றையதினம் (15) யாழ்ப்பாணத்தில்  இறைவனடி சேர்ந்துள்ளார். 
26 ஆண்டுகளாக சிறையில் இருக்கும்  விக்கினேஸ்வரநாதன் பார்த்தீபன் அவர்களின் தாயான 
விக்கினேஸ்வரநாதன் வாகீஸ்வரி அவர்கள் நேற்றையதினம் இறைவனடி சேர்ந்துள்ளார்

குறித்த அன்னை 26 வருடங்களாக தன்மகனின் விடுதலைக்காக போராடி தன் மகனுக்கு தான் மண்ணறைக்கு போவதற்குள்  ஒரு பிடி சோறூட்ட வேண்டும் என்ற எதிபார்ப்போடு இருந்த அன்னை தன் பிள்ளையின் முகம் காணாமலே விண்ணுலகை அடைந்துவிட்டார்.

இவ்வாறு வடக்கில்  தம் உறவுகளை காணாமல் அவர்களுக்காக ஏங்கி கொண்டிருக்கும் பெற்றோர் பலர் எதிர்பார்புகள் நிறைவேறாமலே தம் பிள்ளைகளை மீட்க முடியவில்லையே என்ற ஏக்கத்தோடு  இறந்து போயுள்ளனர். இவர்களுக்கான நீதி இறந்த பின்னரும் கூட இதுவரை   கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடதக்கது .