வவுனியா பறனட்டகல் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் காயம்!

IMG 20220625 080935 1
IMG 20220625 080935 1

வவுனியா பறனட்டகல் பகுதியில் இன்று (25) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவிக்கின்றனர்.

IMG 20220625 081206

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி வந்த ஜீப் ரக வாகனம் வேக கட்டுப்பாட்டினை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

IMG 20220625 081022

இவ் விபத்தில் வாகன சாரதி உட்பட மூவர் காயமடைந்துள்ளனர். இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா ஓமந்தை காவற்துறையினரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது

IMG 20220625 080912 1