எதிர்வரும் வாரம் பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகள் இடம்பெறும் விதம் தொடர்பான அறிவிப்பு

166838 school holiday
166838 school holiday

எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் ஜுலை மாதம் முதலாம் திகதி வரையான காலப்பகுதியில் பாடசாலை கற்பித்தல் பணிகளை முன்னெடுப்பது குறித்த அறிவித்தலை கல்வி வெளியிட்டுள்ளது.

இதன்படி, கடந்த வாரம் கிராமிய பகுதிகளில் பாடசாலைகள் முன்னெடுக்கப்பட்டமை போன்று, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு போக்குவரத்து அசௌகரியமற்ற பாடசாலைகளை வழமைபோன்று முன்னெடுக்க வேண்டும்.

குறித்த பாடசாலைகளில், போக்குவரத்து பிரச்சினை உள்ள ஆசிரியர்கள், அதிபர்கள் ஊடாக, அந்த ஆசிரியர்களின் பிரத்தியேக விடுமுறையில் விடுவித்து, பொருத்தமான நேர அட்டவணையை தயாரிக்க வேண்டும்.

அதேநேரம், கடந்த வாரம் பாடசாலைகள் இயங்காத நகரப் பகுதிகளில் உள்ள பாடசாலைகளை 3 நாட்களுக்கு இயக்க கல்வி அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, செவ்வாய், புதன் மற்றும் வியாழக் கிழமைகளில் காலை 7.30 முதல் பிற்பகல் 1.30 வரையில் குறித்த பாடசாலைகள் இயங்க வேண்டும்.

அந்தப் பாடசாலைகளில், ஆரம்பப் பிரிவு கற்பித்தல் பணிகளை முன்னெடுக்கும் நாட்கள் குறித்து, தீர்மானிக்கும் அதிகாரம் அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் வராத நாட்களில் இணையவழி முறைமையில், வீட்டுப் பாடங்களை வழங்குதல் உள்ளிட்ட முறைகள் ஊடாக கற்பித்தல் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டும்.

போக்குவரத்து பிரச்சினை காரணமாக, பாடசாலைகளுக்கு சமூகமளிக்க முடியாத ஆசிரியர்களுக்காக, குறித்த நாட்களை தனிப்பட்ட விடுமுறையாக கருதாதிருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.